கத்திமுனையில் பணம் பறித்த 4 பேர் கைது
கோவையில் கத்திமுனையில் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 51). நகை பட்டறை ஊழியர். இவர் ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் ஜெயராஜை வழிமறித்து மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினார்கள்.
அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜெயராஜ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த பைஜு (28), மதுரை வீரன் திட்டைச் சேர்ந்த மதன்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போத்தனூர் நஞ்சுண்டாபுரம் தேவேந்திரன் தெருவை சேர்ந்த சரவணகுமார் (20). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் ரூ.400-யை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி பணம் பறித்த மதுக்கரை ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அஜித்குமார் (24), குனியமுத்துரைச் சேர்ந்த பெரோஸ் கான் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.