ஆரோவில் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது


ஆரோவில் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது குயிலாப்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் 4 பேரும் புதுச்சேரி மாநிலம் முல்குணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32), புதுச்சேரி காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (31), பிள்ளைச்சாவடியை சேர்ந்த தீபக் (29), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட்ராஜ் (28) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து அப்பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், எடை இயந்திரம், டிரிப்ஸ், கால்குலேட்டர், ஊசிகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story