லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் போலீசார் பெரியசெவலை கூட்டுரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த சரவணம்பாக்கத்தை சேர்ந்த மாயவன்(வயது 76), இவரது மகன்கள் சிவகுமார்(40), மாயவன்(53) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 133 லாட்டரி சீட்டுகள், ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் லாட்டரி சீ்ட்டு விற்றதாக இளந்துறை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஏழுமலை (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்த 41 லாட்டரி சீட்டுகள், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






