பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறிய 4 பேர் கைது


பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறிய 4 பேர் கைது
x

சிவகாசி பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு ஆலையில் ஆய்வு

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல் அமீது மற்றும் போலீசார் பெத்தலுப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை விட கூடுதல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி மரத்தடியில் பட்டாசுகள் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையின் நிர்வாகியான சரவணக்குமார் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து ரூ.6,500 மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விதிமீறல் தொடர்பாக கார்த்திக்கேயன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

3 பேர் கைது

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் கீழத்திருத்தங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் தகர செட் அமைத்து அதில் திருத்தங்கலை சேர்ந்த ராமர் (74) என்பவர் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராமரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வடப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு வீதிகளை மீறி திறந்த வெளிபகுதியில் பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையின் நிர்வாகி கருப்பையா (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல் இன்னொரு பட்டாசு ஆலையிலும் திறந்தவெளி பகுதியில் பட்டாசுகளை தயாரித்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த ஆலையின் நிர்வாகி சிவகாசியை சேர்ந்த முருகன் (45) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story