வாலிபரை கடத்தி அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது


வாலிபரை கடத்தி அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
x

வாலிபரை கடத்தி அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

லால்குடி:

லால்குடி மும்முடிசோழமங்கலத்தை சேர்ந்த மகேந்திரனை, வடக்கு அய்யன் வாய்க்கால் கரை பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரனின் மகன் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், லால்குடி வளையல்காரத் தெருவைச் சேர்ந்த மகேஷ்பாபுவின் மகன் ரவிபிரகாஷ்(வயது 20) என்ற வாலிபரை நேற்று முன்தினம் மதியம் காரில் கடத்தி சென்று தலை, கால் மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிந்து ரவிபிரகாசை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தார். இந்நிலையில் ேநற்று மும்முடிசோழமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன்கள் குணால்(20), சாரதி(19), காமராஜின் மகன் ஹரிபிரகாஷ்(24), பழனிசாமியின் மகன் மணிகண்டன்(34) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story