ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்


ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தொழிலாளி இறந்தார். அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தொழிலாளி இறந்தார். அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூலித்தொழிலாளி குடும்பம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் கனகராஜ் (வயது 35). இவர் சலூன் கடையில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி மஞ்சு (30). இவர்களுக்கு தர்ஷன் (8) என்ற மகனும், இலக்கியா (7) என்ற மகளும் உள்ளனர். கனகராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷம் குடித்து மயங்கினர்

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் வைத்து கனகராஜ், மஞ்சு, தர்ஷன், இலக்கியா ஆகியோர் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஒருவர் சாவு

கனகராஜ் உள்பட 4 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 ேபருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கனகராஜ் உள்பட 4 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா? குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரமசிங்கபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்ததில் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story