அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

வேலூர் மாவட்டத்தில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கள் ராஜேஷ் (வயது 27), ரமேஷ் (22). வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கோபி என்ற கோபிநாத் (20). இவர்களை செல்போன் திருட்டு வழக்கில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலத்தை சேர்ந்த வீரப்பன் (37) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story