கோவில் கலசத்தை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
தலைஞாயிறு அருகே கோவில் கலசத்தை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாய்மேடு:
தலைஞாயிறு அருகே கோவில் கலசத்தை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறை அடுத்த ஆலங்குடி பகுதியில் தலைஞாயிறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவில் கலசம் திருட்டு
விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த வேலன் மகன் புண்ணியமூர்த்தி(வயது 29),தலைஞாயிறு அருகே நத்தபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்த அர்ச்சுனன(38), தலைஞாயிறு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் திருவக்குவளை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் தலைஞாயிறு அருகே திருவிடைமருதூர் காத்தவராயன் சாமி கோவில் கலசத்தை திருடியதும் தெரியவந்தது.
சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் சிறுவர்கள் 2 பேரையும் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.