கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிஜாம் காலனி அருகே பாப்பான் குளத்தில் சந்தேகப்படும்படி நின்ற ஒரு கும்பலை போலீசார் பிடித்தனர். இதில் அந்த கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டையை சேர்ந்த சுதர்சன் (வயது 18) மற்றும் 16, 17, 15 ஆகிய வயதுடைய 3 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 290 கிராம் கஞ்சாவையும், 4 செல்போன்கள், ரூ.350, 2 மொபட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story