மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
சேலம்
கொங்கணாபுரம்- ஓமலூர் பிரதான சாலை அருகே உள்ள மூலப்பாதை பகுதியில் கொங்கணாபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் மது விற்ற கோரணம்பட்டி ஊராட்சி ஏரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தம்மம்பட்டி பஸ் நிலைய பகுதியில் போலீஸ் தம்மம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தம்மம்பட்டி 16-வது வார்டை சேர்ந்த விஜயக்குமார் (39) என்பவர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.
இதேபோல் தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி மேம்பாலம் அருகே மது விற்ற மாலதி (38), வரகூர் பகுதியில் மது விற்ற சக்திவேல் (58) ஆகியோரை தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி கைது செய்தார்.
Next Story