இரட்டை குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
இரட்டை குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
கோயம்புத்தூர்
நெகமம்
பொள்ளாச்சியை அடுத்த முத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் இரட்டை குழந்தைகள் மாதவன்(5), யாகவன்(5) ஆகியோருடன் காரில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். நெகமம் அருகே சென்றபோது எதிரே பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story