சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது


சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:15:56+05:30)

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி ஆகியோர் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு, பாசார், சேஷசமுத்திரம் ஆகிய கிராமங்களில் தீவிர ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர்(வயது 50), வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த விருத்தாம்பாள்(38), பிள்ளையார் கோவில் தெரு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பாசார் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை, சுடுகாடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(42) ஆகிய 4 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 51 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story