திருட்டு வழக்கில் 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை; உளுந்தூர்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
திருட்டு வழக்கில் 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உளுந்தூர்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. இது தொடர்பாக சிதம்பரம் பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் சேகர் (வயது 37), அவரது தம்பி முனியன் (32) மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னல்வாடி பகுதியை சேர்ந்த கண்ணன் (57), தியாகதுருகம் ஏழுமலை (45) ஆகியோரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்து, 17 பவுன் நகையை மீட்டனர். இதற்கிடையே இது தொடர்பாக இவர்கள் மீதான 3 திருட்டு வழக்குகள் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.
இதில் 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) விஜய் ராஜேஷ் உத்தரவிட்டார். மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story