4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்


4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்

விழுப்புரம்

திண்டிவனம்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 27). இவர் மீது மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த சந்துரு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த 26-ந் தேதி அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக பொத்தேரி அருகே தைலாவரம் கம்பர் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிக்கு சென்றார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து மனைவி, மாமியார் கண்எதிரே சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை ஏரிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் ரத்னசபாபதி(வயது 28), சாமுவேல் மகன் விஷ்ணு(21), காவனூர் மருதமலை மகன் சக்திகுமார்(24), தைலாவரம் கிருஷ்ணன் மகன் கோபாலகண்ணன்(23) ஆகிய 4 பேரும் நேற்று திண்டிவனம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை இன்று(அதாவது நேற்று) ஒருநாள் திண்டிவனம் நீதிமன்ற காவலில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டு கமலா உத்தரவிட்டார். இதையடுத்து ரத்னசபாபதி உள்பட 4 பேரும் விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story