வீடு புகுந்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது


வீடு புகுந்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கடனுக்கு மாத தவணை கட்டாததால் வீடு புகுந்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மகாசக்திநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கூரிப்பாண்டியன் மனைவி நித்யா (வயது 31). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சொந்த தேவைக்காக கடனாக ரூ.1 லட்சம் பெற்றிருந்தார். இதற்கான மாத தவணையாக ரூ.4ஆயிரத்து 500 கட்டி வந்த அவர் கடந்த 5 மாதகாலமாக மாத தவணை கட்ட முடியவில்லையாம். இது தொடர்பாக தனது குடும்ப சூழ்நிலை குறித்து நிதி நிறுவன மேலாளரிடம் தெரிவித்திருந்தார்.. இருப்பினும் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு வந்த சிலர் அவதூறாக பேசி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அவரது கணவர் கூரிப்பாண்டியன் வந்தபோது அவரை அடித்து உதைத்து காயப்படுத்தி மிரட்டிவிட்டு சென்று விட்டார்கள். இதுகுறித்து நித்யா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பவித்ரன் (22), ஹரிகரன் (21), கோடீஸ்வரன் (23), திருச்செல்வம் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story