தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேர் கைது


தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேர் கைது
x

விவசாய நிலத்துக்கு அனுமதி வாங்கி தனியாருக்கு மண் ஏற்றிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ் கடற்படைத்தளம் எதிரே உள்ள தனியார் இடத்தில் டிராக்டரில் சிலர் சரள்மண் அடிப்பதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், இலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ஆகியோர் விரைந்து சென்று சரள்மண் அடித்து கொண்டிருந்த 4 டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரசிடம் விவசாய நிலத்துக்கு சரள்மண் அடிப்பதாக அனுமதி பெற்று தனியார் நிலத்துக்கு சரள்மண் அடித்து வருவது தெரியவந்தது.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் தெற்கு வெங்கட்ராயபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜா (வயது 27), வேலாயுதபுரம் யாதவர் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் இசக்கிதுரை (20), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு தோழப்பன்பண்ணை வடக்குத்தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜேஷ் கண்ணன் (46), நாசரேத் நொச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் கோகுல் (21) ஆகிய 4 பேரையும் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story