மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த காளியப்பன் (வயது 62)், கல்லடை அரிசன தெருவை சேர்ந்த கணபதி (34), கம்புளியாம்பட்டியை சேர்ந்த ராசம்மாள் (59) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறமும், கீழவெளியூரை சேர்ந்த கனகராஜ் (46) தான் நடத்தி வரும் தள்ளுவண்டி கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story