மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்த ராஜன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபீன்சாகுல் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த சுடலை (72) என்பவரையும் கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் ஒடிசாவை சேர்ந்த கோவின் பிஸ்வால் (29), கூடங்குளம் சாமிகோவில் தெருவை சேர்ந்த தினேஷ் (28) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story