புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
சிப்காட்- பொம்மாடிமலை பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிரடி சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளனூர் ேபாலீஸ் நிலையத்துக்குட்பட்ட சிப்காட் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முகமது லத்திப், தாவூத்மில் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கருப்பையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
11 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதேபோல் நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நாகூர்கனி, சீனிவாசன் ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரிடம் இருந்து மொத்தம் 11 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.