புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிமளம்:
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரிமளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அரிமளம், மிரட்டுநிலை, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரிமளம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக செல்வகுமார், சந்திரன், வையாபுரிபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி ஆகியோரிடம் இருந்து சுமார் ரூ.1000 மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் மிரட்டுநிலையை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் இருந்து சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.