லாரியில் மது கடத்திய 4 பேர் கைது


லாரியில் மது கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் மது கடத்திய 4 பேர் கைது

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் ரோடு வழியாக லாரியில் மது பாட்டில்களை கடத்தி செல்வதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் எலச்சிபாளையம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் லாரியுடன் 1,104 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுவை கடத்தி வந்த முத்து சரவணன்(வயது 44), பிரதீப்(27), பேச்சிமுத்து(43) மற்றும் சிவகுமார்(24) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story