அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது
x

கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்து, 3 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்து, 3 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

ேராந்து பணி

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டிகளை மறித்து சோதனை செய்தனர். கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் காவிரி ஆற்றில் இருந்து உமையாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த மோகன்(வயது45), புளியம்பாடி குடியான தெருவை சேர்ந்த அய்யப்பன்(21), உமையாள்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன், சன்னதி தெருவை சேர்ந்த மதன்குமார்(32), திருப்பாலைத்துறை சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன்(48), உமையாள்புரம் மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன்(50) ஆகிய 6 பேரும் அனுமதியின்றி 3 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதில் போலீசாரை பார்த்ததும் கணேசன், முருகேசன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன், அய்யப்பன், மதன்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் ஓட்டி வந்த 3 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கணேசன், முருகேசன் ஆகியோரை வலைவீசி ேதடிவருகின்றனர்.


Related Tags :
Next Story