வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பொன்பேத்தி இணையமங்களம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 26). இவர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சின்னரெட்டிப்பட்டியில் குளித்தலை- மணப்பாறை மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (30), பூபாலன் (21), வசந்த், அருண்குமார் ஆகிய 4 பேரும் மதன்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து மதன்குமார் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து, சரக்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்து, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து கத்தி மற்றும் ஒரு பொம்மை துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.