கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது


கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
x

கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி டோனாவூர் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 31). இவரை ஏர்வாடி போலீசார் அடிதடி வழக்கில் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அதேபோல் வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவன்பாண்டி (54) என்பவரை திருக்குறுங்குடி போலீசார் மிரட்டல் விடுத்தல் வழக்கில் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். தாழையூத்து பாலாமடை சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகதுரை (47) என்பவரை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அதேபோல் வள்ளியூர் உற்றடி பகுதியை சேசர்ந்த செல்வம் (54) என்பவரை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

இவர்கள் 4 பேரும் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதனால் இவர்களுக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து அந்தந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story