மதுபாட்டில் விற்ற 4 பேர் பிடிபட்டனர்


மதுபாட்டில் விற்ற 4 பேர் பிடிபட்டனர்
x

மதுபாட்டில் விற்ற 4 பேர் பிடிபட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் காட்டுச்செல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில் விற்றதாக அதே கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் சக்திவேல் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி தலைமையிலான போலீசார் பிரிவுடையாம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது மாரியம்மன் கோவில் அருகில் மது பாட்டில் விற்ற லிங்கராஜ் மகன் செந்தில் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பழையசிறுவங்கூர் பகுதியில் ரோந்து சென்றபோது மதுபாட்டில் விற்ற அய்யாக்கண்ணு மகன் மணிவேல் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், தியாகதுருகம் வானவரெட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தாண்டவராயன் மகன் சங்கர் (37) என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். அசகளத்தூர் பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக சுப்பிரமணி (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story