மண் கடத்த முயன்ற 4 பேர் கைது
மண் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணத்தை அடுத்த செல்வமந்தை பகுதியில் அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரி பகுதியின் அருகில் கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் செல்வமந்தை பகுதியை சேர்ந்த குமார் (44), வினோத் (30), குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (34) மற்றும் வேடல் பகுதியை சேர்ந்த செல்வம் (47) என்பதும், இவர்கள் அரசு அனுமதியின்றி மண் எடுப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story