புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
திருப்பூர்
அவினாசி
அவினாசி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 27), ஆலங்காட்டுப்பாளையம் ஜெபராஜ் (50), பழங்கரை சேர்ந்த யுவராஜ் (33), சுதந்திர நல்லூரை சேர்ந்த கனகராஜ் (40) ஆகியோர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
---------------
Related Tags :
Next Story