தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது


தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது
x

திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 ¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 ¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபொன்லிங்கராஜன் (வயது 45). திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த சண்முகாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆன்லைன் பண பரிவர்த்தனை மையங்களில் வசூல் செய்யும் பணியை செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவு ஜெயபொன்லிங்கராஜன் வேலையை முடித்து விட்டு ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவினாசி ரோடு ஆஷர்நகர் அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னையை சேர்ந்த மணிகண்டன் (27), இவருடைய தந்தை முருகன் (55), தாய்மாமா திருப்பதி (54) மற்றும் மணி என்கிற பெட்ரோல் மணி (29) உள்ளிட்ட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு வழக்குகள்

போலீசார் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. மணிகண்டன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஜெயபொன்லிங்கராஜ் பணி தொடர்பாக அடிக்கடி பணம் கொண்டு செல்வதை தெரிந்து கொண்ட மணிகண்டன் தனது தந்தையை திருப்பூருக்கு வரவழைத்து ஜெயபொன்லிங்கராஜிடம் வழிப்பறி செய்வது தொடர்பாக திட்டம் தீட்டி உள்ளார். பின்பு திருப்பதி, மணி என்கிற பெட்ரோல் மணி மற்றும் மற்றொரு முருகனை சென்னையில் இருந்து வரச்செய்துள்ளனர். இதன் பின்னரே வறிப்பறி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கும், அவருடைய தந்தை முருகன் மீது கொலை வழக்கும் இருப்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொரு முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

------------------


Next Story