டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி


டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி
x

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணத்தினால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

சமீபத்தில் சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டு உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற வியாதிகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

4 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் என 4 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு உள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு 32 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.


Related Tags :
Next Story