சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது


சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது
x

சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

க.பரமத்தி பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின்பேரில், க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திப்பாளையம் புதூர் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட க.பரமத்தி அருகே உள்ள வேலம்பாளையத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 29), புன்னம் சத்திரத்தை சேர்ந்த திலீப் (21), அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் (23), ஈரோடு மாவட்டம், குப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story