குடிநீர் கிணற்றுக்குள் 4 விஷ பாம்புகள்
திருவாடானை அருகே குடிநீர் கிணற்றுக்குள் 4 விஷ பாம்புகளை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை அருகே கட்டிவயல் ஊராட்சி, சிறுநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்குள் பாம்புகள் இருப்பதாக கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தரைமட்ட அளவில் இருந்த கிணற்றுக்குள் இருந்த தலா 6 அடி நீளமுள்ள 4 நல்ல பாம்புகளை உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்புகளை திருவாடானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story