பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

மளிகை பொருட்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஜெயங்கொண்டத்தில் வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பினார்.

பின்னர் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு புதுக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக மழையில் நனைந்தவாறு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

4 பவுன் சங்கிலி பறிப்பு

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பானுப்பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா சத்தம் போட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story