கணபதியில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை பறிப்பு

கணபதியில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை பறிப்பு
கணபதி
கோவை கணபதி பி.என்.டி காலனி கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி மீனா ராகவன் (வயது73). இவர் கணவன் இறந்த காரணத்தினால் தனது மூன்றாவது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர்,நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் தனது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மீனா ராகவன் கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்திலிருந்து பறித்து சென்றான். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த மீனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரினில் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.






