வீட்டில் 4½ பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் 4½ பவுன் நகைகள் திருட்டுபோனது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்த ஆனந்தின் மனைவி பாலநந்தினி (வயது 30). இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகனுடன் ஆவுடையார்கோவிலில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றிருந்தார். பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story