விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் திரும்பினர்


விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் திரும்பினர்
x

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் திரும்பினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 11-ந் தேதி ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அசோக் (22), கருப்பு (22), சக்தி (20) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் மீனவர்கள் 4 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன், சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று விமான மூலம் சென்னை திரும்பினர். அவர்களை மீன்வளத் துறையினர் வரவேற்று பின்னர் புதுக்கோட்டைக்கு அழைத்து சென்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


Next Story