எந்த ஆடை எடுத்தாலும் 4 ரூபாய்.. ஆசையுடன் சென்ற வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


எந்த ஆடை எடுத்தாலும் 4 ரூபாய்.. ஆசையுடன் சென்ற வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Sep 2022 9:35 AM GMT (Updated: 28 Sep 2022 10:48 AM GMT)

மன்னார்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடை ஒன்றில் 4 ரூபாய்க்கு ஆடைகள் வாங்க சென்ற பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த பொருகளையும் பணத்தையும் தவறவிட்டு சென்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரபல ஜவுளி கடையின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 நபர்களுக்கு எந்த ஆடை எடுத்தாலும் ஒரு ஆடை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கடையில் குவிந்தனர். இதனால் கடை அமைந்துள்ள ருக்மணிபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடையிலும் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது. கடையில் மலை போல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இந்நிலையில் 4 ரூபாய்க்கு ஆடை வாங்க போட்டி போட்டு வந்தவர்களில் சிலர் தங்களின் விலைஉயர்த்த கைபேசி, ரொக்க பணம், கைபை உள்ளிட்டவற்றை தவறவிட்டு கண்ணீருடன் சென்ற நிலையும் ஏற்ப்பட்டது.Next Story