4 மாணவிகள் பலியான சம்பவம்: பள்ளி ஆசிரியர் கைது
4 மாணவிகள் பலியான சம்பவத்தில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் அருகே, விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாணவிகளை உடன் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் திலகவதி, செபாசகேயுன் மற்றும் பிலிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி ஆகியோர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாணவிகள் பலியான சம்பவம் எதிரொலியாக ஆசிரியர் செபாசகேயுன் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாயனூர் போலீசில் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story