4 மாணவர்கள் தேர்வு


4 மாணவர்கள் தேர்வு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:10+05:30)

மாநில அளவிலான வானவில் மன்றம் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை முதன்மை கல்வி அதிகாரி பாராட்டினார்.

நாகப்பட்டினம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் முழுமையான படைப்பாற்றல்களை வெளிக்கொண்டு வர வானவில் மன்றம் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி நாகை நம்பியார்நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த பிரதீபா, அபிஷா ஆகிய 2 மாணவிகளும், கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ரித்திக், மருங்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த ஜோதிபாசு ஆகிய மாணவர்களும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்று, மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பாராட்டு தெரிவித்தார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உலகாப்பிகை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story