பாருக்கு மதுபானம் சப்ளை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்


பாருக்கு மதுபானம் சப்ளை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
x

பாருக்கு மதுபானம் சப்ளை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர்

தஞ்சையில், டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் இறந்ததையடுத்து பாருக்கு மதுபானம் சப்ளை செய்ததாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் 3 பேர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுபான கூடத்துக்கு சப்ளை

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும்(பார்) செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மதுபான பாரில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் எந்த கடையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என டாஸ்மாக் கடையில் உள்ள இருப்பை ஆய்வு செய்தனர்.

4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்

அப்போது பார் அருகே இருந்த டாஸ்மாக் கடையில் இருந்து தான் பாருக்கு மது சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபானத்தை மொத்தமாக பாருக்கு சப்ளை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் பிறப்பித்து உள்ளார்.


Next Story