கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது


கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிய போது அதில் வந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மீதம் இருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த முனுசாமி மகன் விக்கி என்ற விக்னேஷ்(வயது 24), பழனி மகன் சக்திவேல்(20), செஞ்சி தாலுகா கொனலூர் கிராமம் ரவி மகன் நிதிஷ்குமார்(21) என்பதும், தப்பி ஓடியவர் துத்திப்பட்டு கிராமம் கண்ணன் மகன் திவாகர்(20) என்பதும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தொியவந்தது. இதையடுத்து விக்னேஷ் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன் 3 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல்செய்தனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமம் சக்திவேல் மகன் அய்யப்பன்(19) என்பவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய திவாகரை வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான சென்னை வாலிபர்கள் மீது வில்லிவாக்கம் பகுதியில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் மேற்படி விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story