4 வழிச்சாலை பணிக்கான இரும்பு பொருட்கள் திருட்டு


4 வழிச்சாலை பணிக்கான இரும்பு பொருட்கள் திருட்டு
x

விழுப்புரத்தில் 4 வழிச்சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் சாலையில் 7 கிலோ இரும்புக்கம்பிகள், ஒரு ஜாக்கி போஸ்ட், 2 சென்ட்ரிங் இரும்பு பிளைட் என 22 கிலோ எடையுள்ள இரும்புப்பொருட்களை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த சாலைப்பணியை மேற்கொண்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளரான விழுப்புரம் அரசு ஊழியர் நகரை சேர்ந்த குமார் என்பவர், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அந்த புகாரில், சாலைப்பணிக்கான இரும்புக்கம்பிகள், சாலாமேடு மீனாட்சி நகரில் உள்ள ஏழுமலை என்பவரின் இரும்புக்கடையில் இருந்ததாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார். அதன்பேரில் ஏழுமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story