மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் உள்ள சந்திரசேகரன் (வயது 42) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வேன் மூலம் ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வேலூர் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.இதில் மினி வேனில் மட்டும் 75 மூட்டைகளில் சுமார் 4டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை பறிமதல் செய்து உரிமையாளர் சந்திரசேகரனையும் கைது செய்தனர்.

கைதான அவர் வேலூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜாவில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story