வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 4 ரெயில்கள் ரத்து

கோவை
கோவை வழியாக ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இயக்கப்படும் 4 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்காள மாநிலம் மற்றும் ஒடிசா இடையே 3-வது ரெயில் பாதை கட்டுமானம் தொடர்பான பொறியியல் பணிகளைக் கருத்தில் கொண்டு ரெயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை வழியாக இயக்கப்படும் ரெயில்கள்
1. ரெயில் எண்.22851 சந்த்ராகாச்சி - மங்களூரு (சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக) செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ், இன்று (வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சந்த்ராகாச்சியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. ரெயில் எண்.22852 மங்களூரு - சந்த்ராகாச்சி இடையே (கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக) செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ், வருகிற 25-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ரெயில்
3. ரெயில் எண்.15906 திப்ருகர் - கன்னியாகுமரி (சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக) வருகிற 25 மற்றும் 28-ந்தேதி திப்ருகரில் இருந்து புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ்( இரு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் விரைவு ரெயில்) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. ரெயில் எண்.15905 கன்னியாகுமரி - திப்ருகர் (கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக) அடுத்த மாதம் 2-ந்தேதி மற்றும 5 ந்தேதி ஆகிய 2 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் (இரு வாரங்களுக்கு இடையே இயக்கப்படும் விரைவு ரெயில்) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கோவை, பிப்.23-

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.