கர்நாடகா மாநில பாக்கெட்மது விற்ற 4 பெண்கள் கைது


கர்நாடகா மாநில பாக்கெட்மது விற்ற 4 பெண்கள் கைது
x

வாணியம்பாடியில் கர்நாடகா மாநில பாக்கெட் மது விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் டவுன் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த அதேப் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (35), வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (38), வளர்மதி (45) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவரர்களிடம் இருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story