மினி லாரி மோதி 4 வயது சிறுமி பலி


மினி லாரி மோதி 4 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலங்குறிச்சி அருகே மினி லாரி மோதி 4 வயது சிறுமி பலி தாய் கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்

கடலூர்


கருவேப்பிலங்குறிச்சி

சிறுமி

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 35). இவருடைய மனைவி சிவசங்கரி(28). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சிவசங்கரி தனது மகள் சம்யுக்தா(4)வுடன் வண்ணாங்குடிகாடு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மினி லாரி மோதியது

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி சம்யுக்தா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடி உயிருக்கு போராடினாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவசங்கரி கதறி அழுதார்.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சம்யுக்தாவை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சம்யுக்தா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகளின் உடலை பார்த்து சிவசங்கரி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

கிராமமக்கள் சோகம்

இந்த விபத்து குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயின் கண்எதிரே மினி லாரி மோதி சிறுமி பலியான சம்பவம் வண்ணாங்குடிகாடு கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story