உளுந்தூர்பேட்டை நகைக்கடையில் 7½ கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவருக்கு 4 ஆண்டு சிறை
உளுந்தூர்பேட்டை நகைக்கடையில் 7½ கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவருக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடை வீதியில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த கடைக்குள் கடந்த 2010-ம் ஆண்டு இரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்மநபர் கடையில் இருந்த 7½ கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்ததாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது 59) என்பவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு இறுதிகட்ட விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான சண்முகத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story