கிராம சபை கூட்டத்தில் தர்ணா ஈடுபட்ட இளைஞர்கள்
கிராம சபை கூட்டத்தில் தர்ணா ஈடுபட்ட இளைஞர்கள்
அவினாசி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட 31 ஊராட்சியில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கருவலூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது கருவலூர் ஊராட்சி எலச்சிபாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி, சரவணகுமார் திவாகர், பிரவின் ஆகியோர் எங்கள் ஊருக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று கூறி கிராமசபை கூட்டம் நடந்த இடத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில் இவர்கள் 4 பேரும் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஊராட்சி நிர்வாகத்தினரை வரவழைத்து எலச்சிபாளையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.