கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கான மாஸ்டர் பிளான்.


கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கான மாஸ்டர் பிளான்.
x
தினத்தந்தி 29 Jun 2023 12:30 AM IST (Updated: 29 Jun 2023 12:30 PM IST)
t-max-icont-min-icon

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கான மாஸ்டர் பிளான்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாக கோவிலின் ஆணையர் ஹர்ஷினி கூறினார்.

மருதமலை கோவில்

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

நாளுக்கு நாள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி இந்து சமய அறநிலை துறை சார்பில் கோவிலில் வளர்ச்சி பணிகளுக்கான ரூ.40 கோடி ரூபாய் செலவில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது என்று கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

தங்க ரதம் வரும் பாதை

மருதமலை சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ரூ.40 கோடி செலவில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக லிப்ட் அமைக்கும் பணிகள் ரூ. 5 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நடைபெறுகிறது. இதேபோல் மலைப்பாதையில் உள்ள தார் சாலைகளை சீரமைக்கும் பணி ரூ.3 கோடியே 57 லட்சம் செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் ரூ.89 லட்சம் செலவில் புதிய முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.75 லட்சம் செலவில் மலைக்கோவிலில் தங்கரதம் வலம் வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.55 லட்சம் செலவில் தங்க ரதம் இருக்கும் இடத்திற்கு அருகில் புதிதாக யாகசாலை மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.4 கோடியே 10 லட்சம் செலவில் கோவிலில் பின்புறம் மலை மேல் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபமாக அமைக்கப்பட உள்ளது.

மடப்பள்ளி

மேலும் மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ரூ.41 லட்சம் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.20 லட்சம் செலவில் கோவிலின் மலைமேல் புதிதாக மடப்பள்ளி கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.இங்கு உள்ள தேவர் மண்டபம் ரூ.7லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

கோவிலின் கொடிமரம் அருகே உள்ள தகர சீட்டினை அகற்றி புதியதாக வசந்த மண்டபம் அமைக்கும் பணி ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது.

இதேபோல மலைக்கோவிலின் மலைமேல் உள்ள படிக்கட்டுகளை ரூ.64 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

ராஜகோபுரம் செல்லும் படிக்கட்டுகளை ரப்ஸ்டோனாக மாற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. மலை அடிவாரத்தில் கோவில் நுழைவு வாயிலில் புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணி ரூ.28 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று பணிகள் முடிவடைய உள்ளது.

காத்திருக்கும் மண்டபம்

இதுபோல விடுபட்ட சில பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் புதிதாக வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது. மலை மேல் பக்தர்கள் பஸ்களில் ஏறி செல்வதற்காக காத்திருக்கும் மண்டபம் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட உள்ளது. லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 மாதங்களில் லிப்ட் அமைக்கும் பணி முடிவடைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story