பலத்த மழையால் சென்னையில் 40 விமானங்கள் தாமதம்


பலத்த மழையால் சென்னையில் 40 விமானங்கள் தாமதம்
x

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொச்சி, புனே, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், கோவா, திருச்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

மீனம்பாக்கம்,

சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை விமான நிலையத்தில் பலத்த மழை காரணமாக பயணிகளும், வழியனுப்ப வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

கனமழையால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொச்சி, புனே, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், கோவா, திருச்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, சூரத், சீரடி, மதுரை, லக்னோ உள்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story