அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து40 பேர் காயம்


அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து40 பேர் காயம்
x

கீழ்கொடுங்காலூரில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

கீழ்கொடுங்காலூரில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.

வேலூரிலிருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் அரசு பஸ் நேற்று வந்தவாசியை கடந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார். அதேபோல் சென்னையிலிருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் அண்ணாமலை ஓட்டி வந்தார்.

மேல்மருவத்தூர் சாலையில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது இந்த பஸ்சும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பஸ்களின் டிரைவர்களான அண்ணாமலை, ராஜேந்திரன் மற்றும் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 40 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் மற்றும் வந்தவாசி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்சுகள் மற்றும் அந்த வழியாக வந்த தனியார் வாகனங்களில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story